தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி மதுபாட்டில்களை சேமித்து வைப்பதற்காக 1,500 குடோன்களை வாடகைக்கு எடுக்க திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: காலி மதுபாட்டில்களை சேமித்து வைக்க 1500 குடோன்களை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஒவ்வொரு மதுபான பாட்டிலையும் விற்பனை செய்யும் போது கூடுதலாக ரூ.10 சேர்த்து நுகர்வோரிடம் வசூல் செய்ய வேண்டும். மீண்டும் காலி பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அந்த ரூ.10 திருப்பி செலுத்த வேண்டும். இந்த திட்டத்தை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்திருந்தது.

Advertisement

அதன்படி, கோவை, தர்மபுரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் முழுமையாகவும், 7 மாவட்டங்களில் பகுதி நேரமாகவும் காலி மதுபான பாட்டில்கள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் அண்மையில் உயர் நீதிமன்றம் நவம்பர் 30ம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் காலி பாட்டில்களை திரும்ப பெறுவதற்கான திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, ஊழியர்கள் பற்றாக்குறை, வாடிக்கையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பாட்டில்களை சேமித்து வைக்க இடம், வாங்கப்படும் பாட்டில்களை கையாளுவதற்கான பயிற்சி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.

காலை நேரத்தில் கூட்டம் குறைவாக இருக்கும் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கி பாட்டிலை திரும்ப தரும்போது அந்த தொகையை திருப்பி அளிக்க முடியும். ஆனால், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கூட்டம் அதிகப்படியாக இருக்கும். அந்த நேரத்தில் ஒவ்வொரு பாட்டிலையும் சரிபார்த்து அதற்கு தொகையை திரும்பி அளிக்கும் பொறுப்பை ஏற்க செல்வது நியாயமில்லாத ஒன்றாகும். இதற்கு அரசு தீர்வு காணும் வகையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 1800 கடைகள் இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அண்மையில் கூட சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட திருவள்ளூர் தெற்கு, காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் தெற்கு, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், படிப்படியாக மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்த திட்டமிடப்பட்டு முக்கிய பிரச்னையாக இருந்து வரும் வாங்கும் பாட்டில்களை சேமித்து வைக்கும் சிக்கலை தீர்க்கும் 1500 குடோன்களை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது. அந்த குடோன்களை அடையாளம் காணும் வகையில் அந்தந்த மாவட்ட மேலாளர்களிடம் விவரங்களை கேட்டுள்ளோம். எனவே, விரைவில் அதற்கான பணிகளை முடுக்கிவிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement