தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்: ஒன்றிய அரசு ஆய்வறிக்கையில் தகவல், இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சிக்கு பின் அடுத்த சாதனை

சென்னை: தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளதாக ஒன்றிய அரசே அறிவித்துள்ளது. தொழில்துறை தொடர்பான ஆய்வறிக்கையில் இதுதொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு 11.19 என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டியது. அதன் பின் இந்த சாதனையையும் படைத்துள்ளது.

Advertisement

பல ஆண்டுகளாகவே, தொழில்மயமாக்கலில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, பொறியியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, தோல் பொருட்கள், சர்க்கரை முதலான உற்பத்தித் துறைகளில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. உற்பத்தி மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சியில் அதிகமான தனியார் மற்றும் பொதுத்துறை முதலீட்டை ஈர்க்க வேண்டும், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொழில் துறை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.

அதன் மூலம் நீடித்த பொருளாதார வளர்ச்சியினை அடைந்து, அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தந்து தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திட வேண்டும்” என்பது அரசின் கொள்கையாகும். அதன்படி திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, தொட்டத்தெல்லாம் தங்கம் என்பது போல் தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னிலையில் உள்ளது. இதை ஒன்றிய அரசு மற்றும் பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் உள்பட பல தொழில்துறை நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் நடைபெற்ற ‘தமிழ்நாடு வளர்கிறது’ முதலீட்டாளர் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.32,554 கோடி முதலீடு மேற்கொள்ள 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன்மூலம் 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 7, 8ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.6,64,180 கோடி முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. புதிய தொழில் திட்டங்களும் தொடங்கப்பட்டன. இப்படி, தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்து நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது. ஒன்றிய அரசின் 2023-24ம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையை வெளியிட்டது. இந்திய தொழிற்துறையின் வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்த வருடாந்திர ஆண்டறிக்கையில் தமிழ்நாடு முன்னணியில் திகழ்கிறது.

தொழிற்சாலைகளின் தலைநகர் தமிழ்நாடு: தொழில்மயமான மாநிலங்கள் எனக் கருதப்படும் மகாராஷ்டிரா உள்பட அனைத்து மாநிலங்களையும் பின்னுக்குத்தள்ளி, தமிழ்நாடு தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் முதலிடம் பெற்றுள்ளது. ஆய்வின்படி நாடு முழுவதும் 2,60,061 தொழிற்சாலைகள் உள்ளன. இதில் தமிழ்நாட்டில் 15.43 சதவீத தொழிற்சாலைகள் உள்ளன. இதைத் தொடர்ந்து குஜராத் (12.81%), மகாராஷ்டிரா (10.2%), உத்தரபிரதேசம் (8.51%), ஆந்திரா (6.16%) பங்களிப்பை கொண்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள உள் கட்டமைப்பு, தொழில் தொடங்க ஏதுவான சூழல், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட கொள்கைகள் முக்கியக் காரணங்களாகக் கருதப்படுகின்றன. வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் முதன்மை பங்கு: மொத்தமாக வேலைகளில் ஈடுபட்ட நபர்களின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. ஆய்வின்படி நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் 1,95,89,131 பேர் பணி புரிகின்றனர். இதில் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் 15.24 சதவீதம் பேர்.

இதைத் தொடர்ந்து குஜராத் (13.07%), மகாராஷ்டிரா (12.95%), உத்தரபிரதேசம் (8.3%), கர்நாடகா (6.29%) என தொழிலாளர் பங்களிப்பைக் கொண்டுள்ளன. மொத்த உற்பத்தி மதிப்பில், தமிழ்நாடு 10.11% பங்களிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. மொத்த மதிப்பு கூட்டலில், 10.26% பங்களிப்புடன் 3வது இடத்தில் உள்ளது. நிலையான மூலதன முதலீட்டில், தமிழ்நாடு 8.09% பங்களிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. இவை அனைத்தும், தமிழ்நாட்டில் தொழில்துறைக்கு நடப்பதுடன், அதன் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தையும் வலியுறுத்துகின்றன.

தமிழ்நாடு உணவுப் பொருட்கள், துணி உற்பத்தி, மோட்டார் வாகனங்கள், மருந்தியல், மென்பொருள் இயந்திரங்கள், மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த உற்பத்தி ஆகிய துறைகளில் பாரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.உணவுப் பொருட்கள் உற்பத்தியில் தொழிற்சாலைகளில் 15.99% பங்கு தமிழ்நாட்டின் பலமான ஊரக உற்பத்தி மற்றும் பாகுபாடு அமைப்பைக் காட்டுகிறது. மருந்தியல் உற்பத்தியில் சென்னை, ஒசூர், கோவை உள்ளிட்ட நகரங்கள், இந்திய மருந்து ஏற்றுமதிக்குத் துளியாய பங்களிப்பு செய்கின்றன.

இந்த ஆண்டில், உற்பத்தித் துறையில் தமிழ்நாடு மட்டும் 15% பங்களிப்பு வழங்கி, மற்ற தொழில்மிகு மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கியக் குறியாகும். ஏற்கனவே, அதிமுக ஆட்சியில் கடும் பொருளாதார சரிவை சந்தித்த நிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு 11.19 என்ற இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை எட்டி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி புதிய மைல் கல்லை எட்டியது. அதன் பின் இச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

* தேசிய அளவில் தொழில்துறை வளர்ச்சி

2023-24ம் நிதியாண்டில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை 1.95 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 5.92% வளர்ச்சி என்பதைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், உற்பத்தித் துறையில் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

* வல்லுநர்கள் கருத்து

இந்தச் சாதனைகள் தமிழ்நாட்டின் வலுவான தொழில் மற்றும் முதலீட்டு கொள்கைகள், தரமான உள்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடி விளைவுகளாகும். மாநிலம், ‘முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வு’ என்ற பதவியை தக்க வைத்திருப்பதுடன், இந்திய உற்பத்தித் துறையின் மைய சக்தியாக திகழ்கிறது.

தமிழ்நாடு அரசு எடுத்துள்ள முக்கிய முயற்சிகள்

* ஒரு இடத்தில் அனைத்து அனுமதிகளும் கிடைக்கும் வசதி.

* தொழில் கொள்கைகள் புதிய தொழில்கள் எளிதாக தொடங்க ஊக்குவிப்பு.

* உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநாடுகள்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு எப்படி அதிகரிக்கிறது?

* தொழிற்சாலைகள் மூலம் இணைந்த வேலைவாய்ப்பு.

* தொழில் பயிற்சி மையங்கள், ஐடிஐகளில் பயிற்சி பெற்றோர் தொழில்களில் உள்ளடங்குகிறார்கள்.

* பெண்களும், இளைஞர்களும் பெரும்பாலும் உற்பத்தித் துறையில் வேலைக்கு சேர்கிறார்கள்.

* தேசிய அளவில் தொழில்துறை வளர்ச்சி

2023-24ம் நிதியாண்டில், தொழிற்சாலைகளில் பணிபுரியும் மக்களின் எண்ணிக்கை 1.95 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 5.92% வளர்ச்சி என்பதைக் காட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும், உற்பத்தித் துறையில் 57 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

* வல்லுநர்கள் கருத்து

இந்தச் சாதனைகள் தமிழ்நாட்டின் வலுவான தொழில் மற்றும் முதலீட்டு கொள்கைகள், தரமான உள்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் மனிதவள மேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றின் நேரடி விளைவுகளாகும். மாநிலம், ‘முதலீட்டாளர்களின் முதன்மைத் தேர்வு’ என்ற பதவியை தக்க வைத்திருப்பதுடன், இந்திய உற்பத்தித் துறையின் மைய சக்தியாக திகழ்கிறது.

* இந்த ஆண்டில், உற்பத்தித் துறையில் தமிழ்நாடு மட்டும் 15% பங்களிப்பு வழங்கி, மற்ற தொழில்மிகு மாநிலங்களைப் பின்னுக்கு தள்ளியுள்ளது. இது மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை வெளிப்படுத்தும் முக்கியக் குறியாகும்.

தமிழ்நாடு ஏன் முன்னிலையில் இருக்கிறது?

* தொழிற்சாலைகள் அதிகம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டில் தான் அதிக தொழிற்சாலைகள் (மொத்தத்தின் 15.43%).

* வேலைவாய்ப்பு அதிகம் தொழில்துறையில் வேலைவாய்ப்பு தரும் முக்கியமான மாநிலம்.

* மூலதன முதலீடு அதிகம் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான முதலீடு தொடர்ந்து பெருகி வருகிறது.

* பல்வேறு தொழில்களில் முன்னேற்றம் உணவுப் பொருட்கள், ஆடைகள், மோட்டார் வாகனங்கள், மருந்துகள், மென்பொருள் உற்பத்தி முதலியவற்றில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

* தொழிற்சாலைகளுக்கு 24 மணி நேரமும் தங்கு தடையின்றி மின்சாரம் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.

எதிர்கால திட்டங்கள்

* சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் தொழில்கள் வளர்ச்சி பெறும் திட்டங்கள்.

* மின்சார வாகன உற்பத்தி மையங்கள் புதிய தொழில்நுட்பங்களை ஆதரிக்கும் புவிநிலை.

* தொழிலாளர்களுக்கான பயிற்சிகளை அதிகரிக்கும் திட்டங்கள்.

*தொழிற்சாலைகளின் எண்ணிக்கையிலும் தமிழ்நாடே முதல் இடம்

இந்தியாவில் இயங்கும் மொத்த தொழிற்சாலைகளில் 15.43% தமிழ்நாட்டில் உள்ளன. இது உற்பத்தித் திறனிலும் முதலீட்டுப் பொருத்தத்திலும் மாநிலத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

Advertisement