தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதிய பணியாளர்கள் இல்லாததால் பாயின்ட்ஸ்மேன் பணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் 5000 பேரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு: இந்திய ரயில்வேக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு

சென்னை: போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், இந்திய ரயில்வே முன்னாள் ராணுவ வீரர்களை பாயின்ட்ஸ்மேன் பணியில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு க்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரயில்வே வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், முறையான ஊழியர்கள் நியமனம் ஆகும் வரை தற்காலிக நடவடிக்கையாக 5,058 முன்னாள் ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி அளித்துள்ளது.

Advertisement

ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் முன்னாள் ராணுவ வீரர்கள் நல வாரியங்கள் மூலம் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்படும். அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் இந்த உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 2026 டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும். காலி பணியிடங்களின் நிலைமையைப் பொறுத்து இந்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

பாயின்ட்ஸ்மேன் பணி: பாயின்ட்ஸ்மேன் என்பவர் ரயில் பாதையில் உள்ள சுவிட்ச்களை கையால் இயக்கி, ரயில்கள் பாதுகாப்பாக யார்டுகள் மற்றும் சந்திப்புகள் வழியாக செல்வதற்கு உதவுபவர். மேலும், ஸ்டேஷன் மாஸ்டருக்கு உதவியாக இருந்து, விபத்து இல்லாமல் ரயில்கள் சீராக இயங்குவதற்கு தேவையான பணிகளை செய்வார். பாதுகாப்பு பிரிவுக்கு தேர்வு செய்யப்பட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் பாயின்ட்ஸ்மேன்களுக்கான முழுமையான ஆரம்ப பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

பயிற்சி காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் மட்டுமே களப்பணியில் நியமிக்கப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெறத் தவறுபவர்கள் அல்லது பொருத்தமற்றவர்கள் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுவார்கள். இந்நிலையில் இப்பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் முன்னாள் ராணுவ வீரர்களை நியமிக்கும் முடிவுக்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அனைத்து இந்திய ரயில்வே தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர் கண்ணையா தெரிவிக்கையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

குறுகிய கால ஒப்பந்தத்தில் பணியாளர்களை முக்கியமான பாதுகாப்பு அமைப்புகளை இயக்க அனுமதிப்பது பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல். அவர்களுக்கு நீண்ட கால பொறுப்பு அல்லது கணக்கு கேட்கும் நிலை இல்லை. ஒப்பந்தம் முடிந்ததும், சிக்னல்கள் மற்றும் பிற முக்கியமான பாதுகாப்பு அமைப்புகள் பற்றிய முழு தகவல்களுடன் அவர்கள் வேலையை விட்டு வெளியேறிவிடுவார்கள். எனவே இந்த முடிவு ஆபத்தானது என அவர் தெரிவித்தார்.

* ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எச்சரிக்கை

2024 அக்டோபர் 11 அன்று தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் உள்ள கவரப்பேட்டை நிலையத்தில் பக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் பின்புறத்தில் மோதிய விபத்துக்கு பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த சம்பவத்தை ‘நாசவேலை’ என வகைப்படுத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர், பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களின் ஈடுபாடு குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், ரயில்வே உளவுத்துறை பிரிவு உள் கண்காணிப்பை வலுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்கும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் பரிந்துரை செய்தார். ‘‘முக்கியமான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் அமைப்புகளின் பராமரிப்பு மற்றும் இயக்கத்திற்கு ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதையும், அவர்களுக்கு அந்த வேலைகளில் அனுபவம் அளிப்பதையும் முன்னுரிமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

குறுகிய காலத்தில் இது குறைந்தபட்சமாக குறைக்கப்பட வேண்டும், நீண்ட காலத்தில் முற்றிலும் பூஜ்ஜியமாக மாற்றப்பட வேண்டும்’’ என்று அவர் ரயில்வே வாரியத்திற்கு அளித்த அறிக்கையில் தெரிவித்தார். இந்த பாதுகாப்பு ஆணையரின் எச்சரிக்கைக்கு எதிராக, இப்போது ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை முக்கியமான பாதுகாப்பு பணியில் நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News