யானை தாக்கி உயிரிழந்து ஓராண்டு நிறைவு; கரும்பு வழங்கி ஆசி பெற்ற பாகனின் பெண் குழந்தைகள்: திருச்செந்தூரில் நெகிழ்ச்சி
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்தாண்டு தெய்வானை (26) யானை எதிர்பாராதவிதமாக தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தற்போது வரை யானை கோயில் நிர்வாகத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. யானை சகஜ நிலைக்கு திரும்பி, திருவிழாக்கள் மற்றும் தங்க தேர் உலாவில் பங்கேற்று வருகிறது.
Advertisement
இந்நிலையில் பாகன் உயிரிழந்து ஓராண்டானதையடுத்து பாகன் உதயகுமாரின் மகள்கள் அக்சரா, அகல்யா ஆகிய இருவரும் நேற்று யானை தங்கும் குடிலுக்கு வந்து தெய்வானை யானைக்கு பழங்கள், கரும்பு கொடுத்து ஆசி பெற்றனர். இது அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Advertisement