மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடக்கம்
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் 1.30 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரந்திநிதிகள் பெயர் பெறப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
Advertisement
Advertisement