மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி இன்று தொடக்கம்!!
சென்னை: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் ஆய்வு நடத்தப்படுகிறது. இன்னும் சில மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை துரிதப்படுத்தி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் இருக்கிறது. இதற்காக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு வாக்குப் இயந்திரங்களை சரிபார்க்கும் பணி என்பது தொடங்கி இருக்கிறது.
இன்றைய தினம் திருநெல்வேலி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இருக்கக்கூடிய இந்திய தேர்தல் ஆணையத்துக்கு சொந்தமான வாக்கு இயந்திரங்களை சரிபார்க்கும் பணி என்பது தொடங்கி இருக்கிறது. முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று தொடங்கி ஜனவரி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சரிபார்ப்பு பணிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டில் 1.30 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அரசியல் கட்சிகளிடம் இருந்து பிரதிநிதிகள் பெயர் பெறப்பட்டு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.