சமூகரெங்கபுரத்தில் மின்சார வயர்கள் விழுந்து இரு பசுமாடுகள் பலி
நெல்லை: நெல்லை மாவட்டம் சமூக ரெங்கபுரத்தில் மின்சார வயர்கள் விழுந்து இரு பசுமாடுகள் பலியாகின. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த இரு தினங்களில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் இடி, மின்னலும் காணப்படுகிறது. இந்நிலையில் ராதாபுரம் அருகே சமூகரெங்கபுரத்தை சேர்ந்த அண்ணாமலை முருகன் என்னும் விவசாயி, நேற்று தான் வளர்த்து வரும் கால்நடைகளை அப்பகுதியில் உள்ள குளம் அருகே மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.
Advertisement
மழை பெய்த நிலையில் அப்பகுதியில் சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள் அறுந்து கீழே விழுந்துள்ளது. அங்கு மேய்ந்து கொண்டிருந்த இரு பசுமாடுகள் மீது மின்சார வயர்கள் பட்டு அவை சம்பவ இடத்திலேயே இறந்தன. இதை பார்த்த விவசாயி கண்ணீர் வடித்தார். அரசு சார்பில் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Advertisement