ராமேஸ்வரம்- ராமநாதபுரம் இடையே மின்சார ரயில் சேவை இன்று முதல் துவக்கம்
Advertisement
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - ராமநாதபுரம் இடையான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையில் கடந்த செப்.13ம் தேதி மின்சார சோதனை ரயிலை இயக்கி அதிகாரிகள் ஆய்வு பணிகளை செய்தனர். இதையடுத்து ராமேஸ்வரம் வரை மின்சார ரயிலை இயக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இன்று முதல் குறிபிட்ட சில மின்சார இன்ஜின் ரயில்கள் ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.
அதன் அடிப்படையில் திருச்சி -ராமேஸ்வரம், கோவை - ராமேஸ்வரம், ஓகா - ராமேஸ்வரம் மற்றும் ராமேஸ்வரம் - திருப்பதி ஆகிய நான்கு விரைவு ரயில்கள் இன்று முதல் மின்சார இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் ரயில் பாதைகள் 100% முழுமையாக மின்மயமாக்கப்பட்டு உள்ளதால், ரயிலின் வேகம் 120 கிமீ வரை அதிகரிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Advertisement