மின் பகிர்மான கழகத்தின் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
சென்னை: மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: கடந்த 13ம் தேதி தமிழக அரசு மாநில அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தியது. மேலும், இந்த உயர்வு இந்த ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு அமல்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசின் ஆணையை பின்பற்றி தமிழ்நாடு மின் பகிர்மான கழக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் 2025ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படியை 58 சதவீதமாக உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது. 2025 ஜூலை முதல் அக்டோபர் வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை மின்னணு தீர்வு சேவை மூலம் நவம்பர் 2025ம் மாத ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியத்துடன் வழங்கப்படும்.
Advertisement
Advertisement