சென்னையில் 3 கோட்டங்களுக்கு நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சென்னை: மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாசாலை கோட்டத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை, லபாண்ட் தெருவில் உள்ள கோட்ட அலுவலகம், கிண்டி கோட்டத்திற்கு உட்பட்ட கே.கே.நகர் துணை மின்நிலையம், பொன்னேரி கோட்டத்திற்கு உட்பட்ட வேண்பாக்கத்தில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் அண்ணாநகர் கோட்டத்திற்கு உட்பட்ட பொறியாளர் அலுவலகம் ஆகிய 4 கோட்டங்களுக்கும் நாளை காலை 11 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் மக்கள் கலந்து கொண்டு மின்சார துறை தொடர்பான குறைகளை தெரிவித்து அதற்கான விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
Advertisement
Advertisement