தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மின்சார பேருந்து தனியார்மயம் விவகாரம்; எடப்பாடி புரியாமல் பேசுகிறார்: அமைச்சர் சிவசங்கர் தாக்கு

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பெரம்பூர் பணிமனையை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி உள்பட பலர் இருந்தனர். இதன்பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது; பெரம்பூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டது. பணிமனையில் தேவைக்கு அதிகம் இடம் இருந்தால் முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் வகையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கூறினார்.

Advertisement

எஸ்ஐஆர் என்றாலே திமுகவுக்கு பதற்றம் ஏற்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளாரோ என்று கேட்டதற்கு, ‘’எஸ்ஐஆர் கொண்டு வந்து பீகாரில் எவ்வளவு பிரச்னைக்குரிய செயல்பாடுகளை செய்திருக்கிறார்கள் என்பதை நாடே அறியும். எனவே, அதை அவர்கள் ஆதரிக்கத்தான் செய்வார்கள். அதன் தீமையை எடுத்துக்கூறி முதலமைச்சர் தமிழ்நாட்டு மக்களுக்கு விளங்க வைக்கிறார். அது அவர்களுக்கு பதற்றம் அடைய வைத்திருக்கிறது.

மின்சார பேருந்துகளை தனியார்மயம் ஆக்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாக கேட்டதற்கு, ‘’அவருக்கு இதுதொடர்பான புரிதல் இல்லை. இது குறித்து ஏற்கனவே தெளிவாக சொல்லியிருக்கிறோம். மின்சார பேருந்து அதிக விலை கொண்டது. அதை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து பெரும் செலவு செய்வதை தவிர்க்கவேண்டும். அது மட்டுமின்றி அவற்றை இயக்குவதற்கும் பராமரிப்பதற்குமான பணியாளர்கள் நம்மிடம் இல்லை. நம்மிடம் பணிபுரிபவர்கள் டீசல் மெக்கானிக் சேர்ந்தவர்கள். அதிக விலை கொண்ட மின்சார பேருந்தில் சிறிய தவறு என்றாலும் மிகப்பெரிய இழப்பு ஏற்படும். பேருந்து தயாரிப்பாளர்களை அவர்களின் நிறுவனத்தின் மூலம் இயக்குவதற்கு டெண்டர் தயாரிக்கப்பட்டு வெளிப்படையான முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர் அரசியல் காரணங்களுக்காக இப்படி பேசி வருகிறார்’ என்றார்.

சமீபத்தில் 1300 கோடி ரூபாய் ஓய்வு பெற்ற மற்றும் பணியில் இருக்கும்போது இறந்த குடும்பத்தினருக்கு பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளது. மீதம் இருப்பவர்களுக்கு முதல் தவணை விரைவில் வழங்கப்பட உள்ளது. மற்றொரு தவணை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வழங்கப்படும்’ என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.இதையடுத்து வருவாய்த்துறை, போக்குவரத்துத் துறை, மருத்துவத்துறை, மின்சாரத்துறை, மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகளுடன் இணைந்து டான்சிக்கு சொந்தமான இடத்தை ஆய்வு செய்தார். மண்டலம்-6, வார்டு-76, செல்லப்பா தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி, வெங்கடம்மாள் சமாதி சாலையில் உள்ள மாநகராட்சி இடம், ஓட்டேரி, நல்லா கால்வாய். வார்டு-73, எஸ்.எஸ். புரம் சந்திப்பு, பிரிக்ளின் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் ஆகிய இடங்களை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

Advertisement