ஏற்ற தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை: தேர்தல் முடிவு குறித்து லாலுபிரசாத் கட்சி கருத்து
பீகார் தேர்தல் தோல்விக்கு பிறகு நேற்று முதல்முறையாக லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் எக்ஸ் தளத்தில், ‘பொது வாழ்க்கையில் பொது சேவை என்பது ஒரு இடைவிடாத செயல்முறை, ஒரு முடிவற்ற பயணம். ஏற்றத் தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை. தோல்வியில் விரக்தியும் இல்லை, வெற்றியில் ஆணவமும் இல்லை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஏழைகளின் கட்சி, தொடர்ந்து குரல் எழுப்பும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
Advertisement