தேர்தல் தொடர்பாக சந்தேகங்களுக்கு வாக்குச்சாவடி முகவரை அணுகும் வகையில் வசதி தேர்தல் ஆணையம் தகவல்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: தேர்தல் தொடர்பான அனைத்து கேள்விகள், புகார்களையும் தீர்ப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் உதவி மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் வாக்குசாவடி முகவரை நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் ‘Book-a-Call with BLO’ எனும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் இசிஐநெட் செயலி வழியாகவும் தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். பயனர்களின் கோரிக்கைகளுக்கு 48 மணி நேரத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ள தீர்வு அளிக்கும். தேர்தல் தொடர்பான புகார்களை வாக்காளர்கள் complaints@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். Book-a-Call with BLO மற்றும் வாக்காளர் உதவி எண் 1950 ஆகியவற்றைப் பயன்படுத்தி தீர்வுகாண ஊக்குவிக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement