தேர்தல் நேர்மையா நடக்கும் என்பது ‘டவுட்’; மோடி சிறந்த நாடக நடிகர்.! முத்தரசன் ‘கலாய்’
Advertisement
நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் அவரது குடும்பம் என்று பீற்றிக்கொள்கிறார். ஆனால் சொந்த மனைவியை காப்பாற்றாத நபர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற முடியும். இப்போது நடைபெறும் தேர்தல் சுதந்திரமாக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் கட்சியினருக்கு பாரபட்சமாக சின்னங்களை ஒதுக்கினார்கள். இதனை யாரும் மறுக்க முடியாது. பாஜ கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு கேட்ட சின்னங்களை உடனே ஒதுக்கி கொடுக்கிறார்கள். அதே வேளையில் எதிர்க்கட்சி கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் முறையாக ஒதுக்கப்படவில்லை. வேறு சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. ஆகவே பாசிச கொள்கை கொண்ட பாஜவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement