தேர்தல் ஆணையத்தில் அதிமுக மனு
புதுடெல்லி: வாக்காளர் தீவிர சிறப்பு திருத்தப் பட்டியல் தமிழ்நாட்டில் தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக எம்பிக்கள் சி.வி.சண்முகம் மற்றும் இன்பதுரை ஆகியோர் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒரு கோரிக்கை மனுவை நேற்று கொடுத்துள்ளனர்.
Advertisement
இதையடுத்து அவர்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘எஸ்.ஐ.ஆர் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் கொடுத்துக் கொண்டிருக்கிறது .தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படியே அவை நடத்தப்பட வேண்டும் என்பது தான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு ஆகும். அதை தான் தற்போது வலியுறுத்தி உள்ளோம். வாக்காளர் பட்டியல் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டு திருத்தப்பட வேண்டும். ’’ என்றனர்.
Advertisement