தேர்தல் முறைகேடு ஜனநாயகத்துக்கு எதிரான மோசடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
டெல்லி: தேர்தல் முறைகேடு என்பது அரசியலமைப்பு, ஜனநாயகத்துக்கு எதிரான மிகப்பெரிய மோசடி என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர் எக்ஸ் பதிவில் கூறியதாவது; வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிராக செய்யப்படும் ஒரு பெரிய மோசடி. மாற்றம் ஏற்படும், நாட்டின் கிரிமினல்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.