Home/செய்திகள்/Election First Program School Education Department Chief Ministers Speech
தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த உடன் முதல் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினேன்: முதல்வர் பேச்சு
11:21 AM Jun 14, 2024 IST
Share
சென்னை: தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த உடன் முதல் நிகழ்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் "ஐம்பெரும் விழா" நடைபெறுகிறது. பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை உணவு திட்டத்தால் 16 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக நம்ம ஸ்கூல் நம்ம பள்ளி திட்டம் தொடங்கப்படும் எனவும் தெரிவித்தார்.