தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளை பெற சிறப்பு செயலி அறிமுகம்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

டெல்லி: பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகார் தேர்தல் அமைதியாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்; பீகார் மாநிலத்தில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளது.

Advertisement

*பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் 203 பொதுத்தொகுதி, 2 எஸ்டி, 38 எஸ்சி தொகுதிகள் உள்ளன.

*வயதானவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

*வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

*பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட உள்ளது.

*வேட்பாளர்களின் படங்கள் வண்ணப்புகைப்படங்களாக இடம்பெற உள்ளன.

*பீகார் தேர்தலை அனைத்து பூத் ஏஜென்டுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

*வாக்காளர் சிறப்பு திருத்தம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

*பீகார் தேர்தலை ஒட்டி காவல் அதிகாரிகளுக்கும் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

*வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகள் பீகாரில் மேற்கொள்ளப்பட்டன.

*வாக்காளர்கள் தங்களது செல்போன்களை வைக்க வாக்குச்சாவடிக்கு வெளியே சிறப்பு ஏற்பாடு

*ஒப்புகைச்சீட்டில் சீரியல் நம்பர் மற்றும் இதர விவரங்கள் தெளிவாக அடையாளம் காணும் வகையில் அச்சடிப்பு.

*தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளை பெற சிறப்பு செயலி அறிமுகம்.

* 1,200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைப்பு.

*வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டருக்கு அப்பால் வேட்பாளர்கள் பூத்துகளை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*முதன்முறையாக EVM-ல் வண்ணங்களில் வேட்பாளர் பட்டியல் பதியப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 2-கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல்:

பீகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்ற நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவ.6, 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கு அக்டோபர் 10ம் தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. பீகாரில் 2ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 13ம் தேதி தொடங்குகிறது. பீகாரில் 121 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நவ.6ம் தேதி நடைபெறுகிறது. பீகாரில் 122 தொகுதிகளுக்கான 2ம் கட்ட தேர்தல் நவ.11ம் தேதி நடைபெறுகிறது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவ.14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படுகின்றன.

Advertisement

Related News