தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை ராகுல் காந்தி தலைமையில் பேரணி
07:39 PM Aug 10, 2025 IST
டெல்லி: டெல்லியில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து நாளை ராகுல் காந்தி தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணையம் நோக்கி பேரணி செல்கின்றனர். ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் 300பேர் ஒரு கி.மோ. தூரம் பேரணி செல்லவுள்ளனர்.