தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் மாநிலத் தலைவர் அன்புமணி என்று இல்லை: பாமக எம்.எல்.ஏ. அருள் பேட்டி
சேலம்: தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் மாநிலத் தலைவர் அன்புமணி என்று இல்லை என பாமக எம்.எல்.ஏ. அருள் தெரிவித்துள்ளார். வழக்கறிஞர் கே.பாலு திட்டமிட்டு பொய்யை பரப்பி வருகிறார் என சேலத்தில் பாமக எம்.எல்.ஏ. அருள் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; பாமக கட்சி அலுவலக முகவரியை சில மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு மாற்றியுள்ளனர். தேர்தல் ஆணைய கடிதத்தில் எந்த இடத்திலும் மாநில தலைவர் அன்புமணி என இல்லை. கொடி, சின்னத்தை பயன்படுத்த கூடாது என யாராலும் எங்களுக்கு தடை விதிக்க முடியாது.பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும் ராமதாஸ் மட்டும்தான் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement