முட்டை விலை 610 காசுகளாக அதிரடி உயர்வு
நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில், கடந்த 3 வாரமாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 610 காசுகளாக அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டல கோழிப்பண்ணை வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. முட்டை ஏற்றுமதி அதிகரிப்பு, குளிர் காரணமாக நாடு முழுவதும் முட்டை விற்பனை அதிகரித்து வருவதால், அனைத்து மண்டலங்களிலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதை பின்பற்றி நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்படுகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வர உள்ளதால் முட்டை விலை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement