தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து திருப்போரூர் வட்டம், முட்டுக்காட்டில் உள்ள புராதன சின்னமான தட்சணசித்ராவினை மாணவ, மாணவியர்கள் பார்வையிடுவதற்கான கல்வி சுற்றுலா வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சுற்றுலாவில் திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 300 மாணவிகள், திருப்போரூர் அரசு ஆண்கள்...

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து திருப்போரூர் வட்டம், முட்டுக்காட்டில் உள்ள புராதன சின்னமான தட்சணசித்ராவினை மாணவ, மாணவியர்கள் பார்வையிடுவதற்கான கல்வி சுற்றுலா வாகனங்களை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த சுற்றுலாவில் திருப்போரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 300 மாணவிகள், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து 350 மாணவர்கள், கேளம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியிலிருந்து 150 மாணாக்கர், கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியிலிருந்து 50 மாணவிகள் சென்றனர்.

மேலும், கோவளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 200 மாணாக்கர், நெம்மேலி அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், மாமல்லபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், பையனூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், சிறுதாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலிருந்து 75 மாணாக்கர், இள்ளலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலிருந்து 75 மாணாக்கர் என மொத்தம் 1,425 மாணவ, மாணவியர்கள் 20 பேருந்துகளில் சென்றனர். கல்வி சுற்றுலா செல்லும் மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் கலந்துரையாடி சுற்றுலாவின் நோக்கம் குறித்தும் தெரிவித்தார்.

சுற்றுலா செல்லும் மாணவ, மாணவியர்கள் சுற்றுலா தலங்களில் தாங்கள் தெரிந்துகொண்டதை குறிப்பெடுத்து தெரிவிக்குமாறு கூறினார். சிறந்த தகவல்களை கூறிய மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்குமாறு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், திருப்போரூர் பேரூராட்சித் தலைவர் தேவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அஸ்கர் அலி, தலைமை ஆசிரியை தெமீனா கிரானேப் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

Related News