தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்வி கனவுக்கு எந்த தடையும் இருக்கக்கூடாது; நடையாய் நடந்த மாணவர்களுக்கு ஜீப் வழங்கிய முதல்வர்: கரடு முரடான பாதையில் பள்ளிக்கு ஜாலி பயணம், சேர்க்கை மீண்டும் அதிகரிப்பு, மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவ-மாணவிகள் இடைநிற்றலை தடுக்கவும், தொடர்ந்து அவர்களுக்கு தரமான கல்வி வழங்கவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பாலான மலைக்கிராமங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதியையொட்டி வசிக்கும் பகுதிகளில் இருந்து உரிய போக்குவரத்து வசதி இல்லாமல் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு நடந்து செல்லும் சூழல் உள்ளது. மேலும் வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு எருமை போன்ற வன விலங்குகளின் நடமாட்டத்தினாலும், அச்சத்தினாலும் இடைநிற்றல் அதிகரித்து வந்தது.

Advertisement

இந்த இடைநிற்றலை தவிர்க்க பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி துவங்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு உணவு, தங்கும் இடம் வசதியு செய்யப்பட்டது. இதனால், இடைநிற்றல் கணிசமாக குறைந்தது. இருப்பினும், தினந்தோறும் பள்ளிக்கு வந்து செல்லும் போக்குவரத்து வாகன வசதி இல்லாததால் பள்ளி இடைநிற்றல் என்பது தவிர்க்க முடியாத நிலையாகவே தொடர்ந்தது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு சார்பிலும் பல்வேறு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில், மலைக்கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பாதுகாப்பாக அழைத்து செல்ல தனியார் வாகனங்கள் ஒப்பந்த முறையில் இயக்கப்பட்டு, மாதந்தோறும் அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டு வந்தது. இதற்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால், இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாமல், மலைவாழ், பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதில் தடை கற்களாகவே இருந்தது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து சேலம், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பழங்குடியின பள்ளிகளுக்கு ரூ.3.62 கோடி மதிப்பீட்டில் 23 ஜீப் வாகனங்களும், பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து 3 வாகனங்களும் என மொத்தம் 26 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களின் பராமரிப்பை அரசு தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைத்துள்ளது. இந்த வாகனங்களுக்கான பராமரிப்பு, எரிபொருள், ஓட்டுநர் ஊதியம் ஆகியவை அரசு மூலம் வழங்கப்படுகிறது.

இந்த 26 புதிய வாகனங்களின் சேவையை கடந்த 6ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பழங்குடியினர் நலத்துறை சார்பில் 65 உண்டு, உறைவிட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த சின்னகல்வராயன்மலை தேக்கம்பட்டு கிராமத்தில் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 142 மாணவ, மாணவிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

பள்ளியின் தலைமை ஆசிரியை ஜூலியட், ஆசிரியை அன்பரசி, தற்காலிக ஆசிரியர்களான அறிவழகன், புஷ்பா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் இப்பள்ளிக்கு முதல்வர் வழங்கிய ஒரு ஜீப் குழந்தைகளுக்காக நாள்தோறும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மலைக்கிராம குழந்தைகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜூலியட் கூறியதாவது:

கடந்த 1978ல் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சிறப்பாக பயின்று வெளியே சென்றுள்ளனர். இப்பள்ளியில் படிக்கும் 50 சதவீத மாணவர்கள் போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களைச் சேர்ந்தவர்கள். இதனால் நாள்தோறும் அவர்கள் பள்ளிக்கு நடந்து தான் வந்து சென்று கொண்டிருந்தனர். அதிகபட்சமாக நவம்பட்டு கிராமத்தை சேர்ந்த 7 குழந்தைகள், சுமார் 6 கிலோ மீட்டர் நடந்து வந்து செல்ல வேண்டும்.

இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். குறிப்பாக, மழைக்காலங்களில் நனைந்து செல்வது, பள்ளிக்கு தாமதமாக வருவது, நாய் தொல்லைகளால் அவதி, மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கப்படுவது உள்ளிட்ட சிக்கல்களை அனுபவித்து வந்தனர். இதனால் பெற்றோரும், ஆசிரியர்களும் குழந்தைகளை நினைத்து அச்ச உணர்வுடனே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது முதல்வர் வழங்கியுள்ள ஜீப் வாகனத்தால், அனைத்து பிரச்னைகளும் தீர்ந்து மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்வது மிகப்பெரிய வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.

தற்போது சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 69 குழந்தைகள் இந்த வாகனத்தின் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். குழந்தைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாகனம் ஒவ்வொரு நடையாக, ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வருகிறது. இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் வந்து செல்வதுடன், பெற்றோரும் தங்களது குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வருவதை அறிந்து உற்சாகத்தில் உள்ளனர். இதற்காக தமிழக முதல்வருக்கு குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை கூற கடமைப்பட்டுள்ளோம். இவ்வாறு தலைமை ஆசிரியை ஜூலியட் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், கொங்காடை, ஆசனூர், தலமலை ஆகிய 4 மலைக்கிராமங்களில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு மாணவ-மாணவிகளுக்காக 4 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டு, இதன் பராமரிப்பு சுடர் தொண்டு அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனங்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத மலைக்கிராமங்களிலும், வனப்பகுதிகளிலும் பாதுகாப்பாக அழைத்து செல்வதால், மாணவ-மாணவிகள் தினந்தோறும் பள்ளிக்கு ஆர்வமாக செல்கின்றனர்.

இதனால், மாணவ-மாணவிகளின் பெற்றோரும் தங்களது குழந்தைகளை வன விலங்குகளின் அச்சமின்றி பள்ளிக்கு உற்சாகமாக அனுப்பி வைக்கின்றனர். இந்த வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்த ஒரு வாரத்திலேயே இடைநின்ற 2 மாணவர்கள் உட்பட 17 மாணவ-மாணவிகள் புதிதாக பள்ளியில் சேர்க்கைக்கு வந்துள்ளனர். இதனால், மலைக்கிராம பள்ளிகளில் சேர்க்கை சதவீதம் உயர்ந்துள்ளது. இதில், தலமலை பள்ளியில் 7 பேரும், கொங்காடையில் 3 பேரும், ஆசனூரில் 5 பேரும் என 15 பேர் புதிதாக சேர்க்கைக்கு வந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 புதிய அரசு வாகனங்களில், முதல் வாகனம் பர்கூருக்கும், 2வது வாகனம் கொங்காடைக்கும், 3வது வாகனம் ஆசனூருக்கும், 4வது வாகனம் தலமலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதில், பர்கூருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மூளையூர், துருசனாம்பாளையம், பிஜில்பாளையம், பள்ளத்தூர் ஆகிய 4 மலைக்கிராமங்களில் இருந்து 35 மாணவ-மாணவிகளும், கொங்காடைக்கு வழங்கப்பட்ட வாகனத்தில், ஜியான்தொட்டி, பாறையூர்,

கெட்டிகோடு, கொங்காடை பகுதியில் இருந்து 48 மாணவ-மாணவிகளும், ஆசனூருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில், அரேபாளையம், புதுதொட்டி, சென்ட்ரல் தொட்டி, பழைய ஆசனூர், அண்ணா நகர் ஆகிய 5 மலைக்கிராமங்களில் 45 மாணவ-மாணவிகளும், தலமலைக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் காளி திம்பம், மாவனத்தம், இட்டரை, ராமரணை, தொட்டமலை, கோடிபுரம் ஆகிய பகுதிகளில் 50 மாணவ-மாணவிகள் என மொத்தமாக 4 வாகனங்களில் 173 மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனர். இதனால், மலைவாழ் மாணவர்களின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

* புதிய வாகனத்தால் மீண்டும் பள்ளியில் சேர்ந்த மாணவன்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே கொங்காடை உண்டு உறைவிட பள்ளியில் இடைநின்று மீண்டும் பள்ளியில் சேர்க்கை பெற்ற மாணவன் வெள்ளியங்கிரி கூறியதாவது: நான் கொங்காடை மலைக்கிராம பகுதியில் வசிக்கிறேன். எனது அப்பா மனநலம் பாதிக்கப்பட்டவர். அம்மா வெளியூருக்கு வேலைக்கு செல்கிறார். நான் தாத்தா-பாட்டி வீட்டில் இருக்கிறேன். நான் கொங்காடை பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்தேன். நான்வீட்டில் இருந்து எங்களது பள்ளிக்கு செல்ல நீண்ட தூரம் செல்ல வேண்டும். கால் வலிக்கும்.

இதனால், நான் 2 ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் இருந்தேன். புதிய வேனில் பள்ளிக்கு எனது ஊரை சேர்ந்தவர்கள் செல்லும்போது, எனக்கும் ஆசையாக இருந்தது. நானும் பள்ளிக்கு வரட்டுமா? என கேட்டதற்கு என்னை அழைத்து சென்று, 6ம் வகுப்பில் சேர்த்து, சீருடை, பென்சில், புத்தகம் கொடுத்தனர். புதிய வேனில் எனக்கு பள்ளிக்கு வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து இனி நான் பள்ளிக்கு செல்வேன். இந்த ஒரு வாரமாக நான் லீவ் எடுக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளேன் என சிரித்த முகத்துடன் மாணவன் வெள்ளியங்கிரி கூறினான்.

* சிரமம் குறைந்தது: தாய் மகிழ்ச்சி

பர்கூர் மலைக்கிராமமான மூளையூர் வனப்பகுதியை சேர்ந்த கெம்பே என்ற பெண் கூறியதாவது: எனது மகள் லோகேஸ்வரி 4ம் வகுப்பும், மகன் தக்சித் இருவரும் பர்கூர் பள்ளியில் படித்து வருகின்றனர். எங்கள் கிராமத்திலிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியாக பள்ளிக்கு செல்ல 2 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டும். காட்டுபன்றி, யானை, காட்டுஎருமை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் குழந்தைகளை தனியாக அனுப்ப இயலாமல் பாதுகாவலர் மூலமாகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வந்தோம்.

தமிழக முதல்வரின் மலைக்கிராமத்தில் வசிக்கும் ஏழைகளின் குழந்தைகளும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ந்து கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் புதிய வாகனங்களை வழங்கி உள்ளார். இந்த வாகனங்கள் மூலம் எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாகவும், மனநிறைவோடும் பள்ளிக்கு அனுப்பி வைக்க முடிகிறது. இதனால் எங்கள் சிரமங்கள் பெருமளவில் குறைந்திருப்பதோடு, பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் எங்கள் குழந்தைகள் தொடர்ந்து செல்ல ஆர்வமாக இருக்கின்றனர் என்றார்.

* பள்ளிக்கு வந்து செல்ல பயமில்லை

தேக்கம்பட்டு பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் நவம்பட்டு பகுதியைச் சேர்ந்த மாணவி கோபிகா கூறியதாவது: எங்களது நவம்பட்டு கிராமத்திற்கும், பள்ளிக்கும் சுமார் 3 கிலோ மீட்டர் ெதாலைவு உள்ளது. எந்தவித போக்குவரத்து வசதியும் இல்லாத எங்களது கிராமத்தில் இருந்து நாள்தோறும் நடந்து தான் பள்ளிக்கு சென்று வந்தேன். எனது தந்தை கோவிந்தராஜ் வெளியூரில் பணியில் உள்ளார். தாயார் பழனியம்மாள் கூலி வேலை செய்து வருகிறார்.

இதனால் பள்ளிக்கு என்னை யாரும் அழைத்து செல்ல முடியாது. உடன் படிப்பவர்களுடன் நடந்தே பள்ளிக்கு சென்று வந்தோம். காலையில் மழை பெய்தால் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். பள்ளி முடிந்து திரும்ப வரும் போது மழை பெய்தால், முழுவதுமாக நனைந்து தான் வீட்டிற்கு திரும்புவோம். மேலும் வழித்தடங்களிலும் போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்தது. இதனால் பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வந்தனர்.

தற்போது முதல்வர் ஐயா உத்தரவின் பேரில் எங்களுக்கு ஜீப் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களை போல, வீட்டு வாசலில் எங்களை ஏற்றிச் சென்று, மீண்டும் எங்களது வீட்டின் முன்பே இறக்கி விடுகின்றனர். இப்போது உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருவதுடன், எங்களது பெற்றோரும் அச்சமின்றி பள்ளிக்கு அனுப்புகின்றனர். இவ்வாறு மாணவி கோபிகா தெரிவித்தார்.

* ஆம்புலன்சாக மாறி அவசர உதவிக்கும்...

கொங்காடைக்கு வழங்கப்பட்ட அரசு புதிய வாகனத்தில் 2வது நாள் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்றதும், வாகனம் பள்ளிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வகுப்பு தொடங்கியதும் ஒரு மாணவன், பள்ளி படிகட்டில் இருந்து தவறி கீழே விழுந்தான். அந்த மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த மாணவனை அரசின் புதிய வாகனம் மூலம் மீட்டு ஓசூரில் உள்ள அரசு கிராமப்புற சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதித்து, அங்கு இருந்து தாமரைக்கரையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மாணவனுக்கு தையல் போடப்பட்டு வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். மலைப்பகுதிகளில் போதிய வாகன வசதியும், ஆம்புலன்சு வசதியும் இல்லாத நேரத்தில் தற்போது அரசின் புதிய வாகனம் அவசர வாகனமாகவும் செயல்பட்டு, பேருதவியாக விளங்கியுள்ளது.

Advertisement