கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது : தமிழ்நாடு அரசு பெருமிதம்
11:38 AM May 21, 2024 IST
Share
சென்னை : கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது என்று தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. பல புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் பயனாக அரசு தொடக்க பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, வாசிப்பு பழக்கம் வளர்க்கும் திட்டங்களை குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.