கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Advertisement
சென்னை: கல்வியில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியை இன்றுவரை பலரும் பாராட்டி வருகின்றனர். வேளாண்மையில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு முன்னேறி வருகிறது. மேட்டூர் அணையை குறித்த நேரத்தில் திறந்து வருகிறோம். உரங்களை போதிய அளவில் வழங்கும்படி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். நடப்பாண்டில் 5.65 லட்சம் ஹெக்டர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மக்கா சோளம், கரும்பு, எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடம். தமிழ்நாடு முந்திரி வாரியம் எனும் தனி அமைப்பை உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார்.
Advertisement