தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கல்வியிலும் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

 

சென்னை: நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை வெளியிடுகின்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து பங்கெடுப்பதை என்னுடைய வாழ்நாள் பெருமைகளில் ஒன்றாக நான் கருதுகின்றேன்.

மாநிலக்கல்வி முறையில் அரசுப் பள்ளிகளில் படித்து, ஐஐடி தொடங்கி, பல முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் வரை, அட்மிஷன் பெற்றுள்ள மாணவர்களையும் இங்கே பாராட்டிக் கொண்டிருக்கிறோம். இது சாதாரண நிகழ்ச்சி கிடையாது. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெறுகின்ற தமிழ்நாட்டினுடைய கல்வித்திருவிழா என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் அறிவுத்திருவிழா என்று சொன்னால் அது மிக, மிக பொருத்தமாக இருக்கும்.

இந்தியாவிலேயே இன்றைக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எண்ணற்ற சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் இன்றைக்கு நேற்றல்ல, சங்க காலம் முதலே தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கி கொண்டுதான் வந்தார்கள். ஆனால், இடையில் ஏற்பட்ட சில வரலாற்றுச் சூழ்ச்சிகளால், தமிழ் மக்களுடைய கல்வியில் தடை ஏற்பட்டது. தடைபட்டது என்றால், அது ஏதோ தானாக ஏற்பட்ட தடை அல்ல. கல்வி உரிமை நமக்கு தடுக்கப்பட்டது. அப்படி தடுக்கப்பட்ட கல்வி உரிமையை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக உருவாகிய இயக்கம் தான் திராவிட இயக்கம்.

அப்படி போராடிப் பெற்ற கல்வியை, எப்படியாவது பறித்து விடலாம் என்று அப்போது முதல் இப்போது வரை தொடர்ந்து சூழ்ச்சிகளை பலர் செய்து கொண்டே வருகிறார்கள். இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு, குலக் கல்வித் திட்டம், மும்மொழிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு என பலவழிகளிலும் நமது கல்வி உரிமையை சிதைக்க முயற்சிகள் நடந்துகொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து தான் இன்றைக்கு தமிழ்நாடு இந்த நிலைக்கு முன்னேறி இருக்கின்றது.

குலக்கல்வித் திட்டம் என்ற ஒன்று வந்தது. மாணவர்கள் பாதிநேரம் படிக்க வேண்டும், பாதிநேரம் குலத் தொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்தத் திட்டம். அந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதற்கு பிறகு தான் குலக்கல்வித் திட்டம் தமிழ்நாட்டிலிருந்து அழிந்தது.

இப்போது, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகின்ற அந்த திட்டத்தை இன்றைக்கு ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மாட்டோம் என்று இன்னொரு வாழும் பெரியாராக போர்முரசு கொட்டியவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

உங்களுடைய கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாட்டிற்கென்று நாங்கள் தனியாக கல்விக் கொள்கையை இயற்றிக் கொள்கிறோம் என்று தைரியமாக துணிச்சலுடன் சொன்னவர் தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள். இதோ, இன்றைக்கு இந்த மேடையில் தமிழ்நாட்டினுடைய புதிய கல்விக் கொள்கை இங்கே வெளியிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில், இதே அரங்கத்தில் நம்முடைய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை' நூலை, நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தான் வெளியிட்டார்கள்.

அந்த நிகழ்ச்சியில், நம்முடைய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதலமைச்சர் அவர்களுக்கு, மதம் பிடித்த யானையை அடக்குவதன் அடையாளமாக ஓர் அங்குசத்தை நினைவுப் பரிசாக கொடுத்தார். அந்த 'அங்குசம்' வெறும் அடையாளம் மட்டும்தான். இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கின்ற இந்த 'தமிழ்நாடு கல்விக் கொள்கை' என்பது தான், உண்மையான அங்குசம். மதம்பிடித்து, தமிழ்நாட்டின் கல்வியை அழிக்கத் துடிப்போரை அடக்குவதற்கான அங்குசம் தான் இந்த மாநிலக் கல்விக் கொள்கை.

புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொன்னார். மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு வழங்கப்படக் கூடிய 2,600 கோடி ரூபாயை தருவோம் என்று வெளிப்படையாகவே மிரட்டினார்கள். இரண்டாயிரம் கோடி அல்ல, நீங்கள் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்காது என்று தைரியமாக சொன்ன ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

எந்தவொரு மொழியாக இருந்தாலும், அதை கட்டாயப்படுத்தி திணிப்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இது தான் தமிழ்நாட்டு மண்ணினுடைய வரலாறு. நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இங்கே தொடங்கி வைத்த மொழி உரிமைப் போர், மகாராஷ்டிரா வரை பரவியது. அங்கே நடந்த மிகப்பெரிய ஒரு போராட்டத்தால், அம்மாநில அரசு மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற்றது. இப்படி எல்லா மாநிலங்களும் விழிப்புணர்வு பெறும்போது, ஒன்றிய அரசே மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டிய கட்டாய சூழ்நிலை கண்டிப்பாக உருவாகும்.

இந்திய அரசியலமைச் சட்டத்தில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் State list தான் இருந்தது. பிறகு, அதனை concurrent list என்று சொல்லப்படும் ஒத்திசைவுப் பட்டியலில் சேர்த்தார்கள். இதன் காரணமாக தான், தமிழ்நாட்டின் கல்வி உரிமையின் மீது பலமுனைகளில் இன்றைக்கு தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எங்களுக்கான கல்வியை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம்' என்ற மாநில உரிமையை நிலைநாட்ட, கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இதற்கான தொடக்கமாகத் தான், தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கையை நான் பார்க்கிறேன்.

அதேபோல், அரசுப் பள்ளியில் படித்து, ஐஐடி போன்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இங்கே பாராட்டு விழாவும் நடந்து கொண்டிருக்கிறது. நண்பர் மகேஷிடம் பேசும் போது இந்த மாணவர்களைப் பற்றி தெரிவிக்குமாறு நான் கேட்டேன். அப்போது, குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் கரிக்கிளம்பாடி கிராமத்தைச் சேர்ந்த தம்பி சந்துரு, தந்தையை இழந்தவர். பாட்டியின் அரவணைப்பில் அரசுப்பள்ளியில் படித்து, JEE clear செய்து இன்றைக்கு உத்தர்காண்டில் உள்ள IIT (Roorkee) ரூர்கீயில் சேர்ந்து இருக்கிறார் என்று தெரிவித்தார். மாணவருக்கு நம்முடைய பாராட்டுக்களை தெரிவிப்போம்.

அதே போல, கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூரைச் சேர்ந்த சவரத் தொழிலாளியின் மகளான ஜெயஸ்ரீ, அரசுப்பள்ளியில் படித்து இன்றைக்கு தைவானில் உயர்கல்வி படிக்க சேர்ந்திருக்கிறார். அவருக்கு நம்முடைய பாராட்டுக்கள். அதே போல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சகோதரி தங்கை கீர்த்திகா. CLAT நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று, திருச்சியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இன்றைக்கு படித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கும் வாழ்த்துகள். இவர்களைப் போல இன்றைக்கு வந்திருக்கக்கூடிய நூற்றுக்கணக்கான அரசுப்பள்ளி மாணவர்கள், தமிழ்நாடு அரசின் துணையோடு, பல முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இன்றைக்கு சேர்ந்து இருக்கிறார்கள். அடுத்தடுத்து வர இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு சிறந்த Role Model-ஆக நீங்கள் அத்தனைபேரும் திகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நாங்கள் சொல்ல விரும்புவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். நீங்கள் படிப்பதில் கவனம் செலுத்துங்கள். அதே நேரத்தில் விளையாட்டிலும் தாராளமாக ஈடுபடுங்கள். உங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பார்த்து, பார்த்து செய்வார். கல்விக்கு ஏற்படும் எல்லா தடைகளையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தகர்த்தெறிவார்கள்.

இங்கு வந்துள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் உங்களுடைய எதிர்காலம் சிறக்க எங்களுடைய வாழ்த்துகளை நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். அதே போல, தமிழ்நாடு மாநிலக் கல்விக்கொள்கை எனும் மகத்தான ஆவணத்தை தயாரித்துள்ள அந்த குழுவுக்கு என்னுடைய பாராட்டுகளையும். வாழ்த்துகளையும் நான் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். கல்வியிலும் தமிழ்நாடு நிச்சயம் வெல்லும்.

Related News