படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் நடிகர் பின்னால் அலைகிறார்களே? அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிண்டல்
சென்னை: படித்தவர்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் நடிகர் பின்னால் அலைகிறார்களே? என்று அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் கிண்டல் அடிக்க ெதாடங்கி விட்டனர். இந்தியாவில் படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் படித்தவர்கள் உள்ளனர். மேற்படிப்பு படிப்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு ஒவ்வொரு மாநிலத்தவரும் தமிழகத்தை பெருமையாக கருதி வருகிறார்.
அப்படிப்பட்ட படித்தவர்கள் மிகுந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் கடைசியில் நடிகர்கள் பின்னால் தான் போகும் நிலைமை தான் இங்கு உள்ளது. நடிகர்கள் ஏதாவது ஓட்டலுக்கு சாப்பிட சென்றாலோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ சென்றால் தன்னை பார்க்க வரும் ரசிகர்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. நடிப்போடு சரி. ரசிகர்களை கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். அது போன்று தான் பிரசாரம் செய்ய வந்த நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்றனர். தான் சென்றாலும் பரவாயில்லை. விவரம் தெரியாத, நடிகர் விஜய் என்றால் யார் என்றே தெரியாத குழந்தைகளையும் அலைத்து சென்றுள்ளனர்.
அப்படி பார்க்க வேண்டும் ஆசை இருந்தால் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம். ஆனால், நடிகர் விஜய் அருகில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசையில் முண்டியடித்து சென்றது தான் நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழக்க காரணமாகி விட்டது. இவ்வளவு படித்திருந்தும், நடிகர் பின்னால் போய் இந்த அளவுக்கு உயிரிழக்க தமிழகம் காரணமாகி விட்டதே என்று அண்டை மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை பார்த்து கிண்டல் அடிக்க தொடங்கியுள்ளனர். நடிகர் பின்னால் போகும் அளவுக்கு அப்படி என்ன நேரிட்டது என்றும் கிண்டல் அடித்து வருகின்றனர்.