எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் திடீர் ஒத்திவைப்பு
சென்னை: இன்றும், நாளையும் நடைபெற இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7.7.2025 முதல் சட்டமன்ற தொகுதி வாரியாக தொடர் பிரசார சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
Advertisement
இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளதால், எடப்பாடி பழனிசாமி இன்று (20ம் தேதி), நாளை நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில் அக்டோபர் 4, 5ம் தேதிகளில் நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சுற்றுப்பயணம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement