எடப்பாடி பழனிசாமியை நம்பினோம்: ஆனால் ஏமாற்றிவிட்டார்: பிரேமலதா விஜயகாந்த் குற்றசாட்டு
சென்னை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி குறித்த ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிட்டு கையெழுத்திடுவதில்லை. அதேபோலதான் தேமுதிக உடன் கூட்டணி ஒப்பந்தத்தில் தேதி குறிப்பிடாமல் கையெழுத்திட்டார்,அதனால்தான் நாம் ஏமாந்துவிட்டோம் என்று பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை தி நகரில் தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைத்து தொகுதிகளிலுமே 80% பூத் கமிட்டி அமைத்து உள்ளது. அதற்காக எல்லாம் தொகுதியிலும் கொடுத்து ஒப்புதல் ரசீது பெற்றுவிட்டோம். இன்னும் மீதம் இருக்கின்ற 20% வெகுவிரைவில் செப்டம்பர் 14 முடித்து தருவதாக நிர்வாகிகள் உறுதியளித்து உள்ளனர்.
அனைத்து பணிகளும் முடிந்தவுடன் நாங்கள் தேர்தலுக்கு அழைத்ததற்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு,’’ முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு பயணம் சென்று இருக்கிறார். ரொம்ப சந்தோஷம் வாழ்த்துக்கள். ஆனால் அவருடைய பயணம் 100% தமிழ் நாட்டுக்காகவும், தமிழகம் மக்களுக்காகவும் இருக்க வேண்டும். தேமுதிகவின் ஒரே ஒரு கோரிக்கை ஏற்கனவே பல வெளிநாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று இருக்கார்.
அதன்மூலம் எந்த அளவு தொழிற்சாலைகள் இங்கு வந்திருக்கிறது, எத்தனை லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைத்து இருக்கிறது என்பதெல்லாம் 1 மில்லியன் டாலர் கேள்வி . அதனால் தான் எல்லா எதிர்கட்சிகளும் இன்றைக்கு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என்று கூறுகிறார்கள். முதல்வர் அரசு முறை பயணமாக சென்று உள்ளார். அவருடைய வெளிநாடு பயணம் வெற்றி அடையட்டும் என்று தேமுதி சார்பில் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது பயணம் வேறுப்பட்டது. நாங்க கழக நிர்வாகிகள் தொண்டர்களை சந்திப்பதும், பிறகு கேப்டன்னுடைய ரத யாத்திரை மூலம் மக்களை சந்திக்கிறோம். ஒரு தொகுதி முழுக்க ஒரு நாளைக்கு நாங்க ஒரு பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்கோம். அடுத்த கட்டம் வேட்பாளரோடு செல்லும் பொழுது அது இன்னும் பெரிய அளவில் பலன் அளிக்கும் என்று கூறினார். மேலும் யாருடன் கூட்டணி எத்தனை தொகுதிகள் யார் வேட்பாளர் அப்படி என்றது எல்லாமே ஜனவரி ஒன்பது கடலூரில் நடக்கின்ற மாநாட்டுக்கு பிறகு பத்திரிக்கையாளர்களாகிய உங்களை எல்லாரையும் தலைமைக் கழகத்திற்கு அழைத்து அதிகாரப்பூர்வமாக உங்களுக்கு தெரிவிக்குறோம் என்று கூறினார்.
வாக்குறுதி அளித்த பிறகும், அதை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டார். என்பது உண்மை. அவரிடம் நம்பிக்கை வைத்து காத்திருந்தோம், ஆனால் மாநிலங்களவை சீட் தருவதாக சொல்லி, இறுதியில் முதுகில் குத்திவிட்டார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலங்களில் கூட்டணி ஒப்பந்தங்களில் தேதியை குறிப்பிட்டு கையெழுத்திடும் நடைமுறை எதுவும் இருக்கவில்லை; அதேபோல தேமுதிக உடனான கூட்டணி ஒப்பந்தத்திலும் தேதியில்லாமல் கையெழுத்திட்டார். இதுவே நாம் ஏமாந்ததற்குக் காரணமாகியது. தற்போது, எடப்பாடி பழனிசாமியின் பிரசார கூட்டங்களுக்கு பணம் கொடுத்து மட்டுமே மக்கள் அழைத்து வரப்படுகிறார்கள்.