துரோகத்தின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி: டிடிவி தினகரன் பேட்டி!
கடலூர்: தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டிடிவி தினகரனும், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறினார். அதிமுக-பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையாத நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விளங்கியுள்ளனர். அதிமுக-பாஜக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ், டிடிவி தினகரன் அடுத்தடுத்து விலகியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, துரோகம் தலைவிரித்தாடுவதாகவும் காட்டுமன்னார்கோவிலில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.
இது தொடர்பாக டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசியதாவது; 2026 தேர்தல் கூட்டணி தொடர்பான அமமுகவின் நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும். அமமுக தொண்டர்கள் விரும்பும் வகையில் எங்களின் கூட்டணி அமையும். அதிமுக-பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட 5 மாதங்களில் புதிய கட்சிகள் எதுவும் இதுவரை இணையவில்லை. தொண்டர்கள் ஒருபோதும் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டார்கள். அதிமுகவை ஒருங்கிணைக்கும் அமித் ஷாவின் முயற்சிகள் எடுபடவில்லை. அமித் ஷாவின் செயல்பாடுகள் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. துரோகம் தலைவிரித்தாடுவதால் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறேன். துரோகத்தின் உச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். என்று கூறியுள்ளார்.