தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டார்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்க நினைக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா. முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி பழனிசாமி இதுவரை வாய் திறக்காதது ஏன் என்று கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

போலி வாக்காளர்களைச் சேர்த்து பாஜகவிற்குத் துணை போகும் அடிமை அதிமுகவிற்கு எதிராய் தமிழ்நாடு ஓரணியில் திரண்டு நின்று வெல்லும். பொய்களைக் கட்டவிழ்த்து ஆட்சியைப் பிடித்த பாஜக, தங்களுடைய ஆட்சித்திறனால் மக்களைக் கவர முடியாமல் நாட்டைத் தொடர்ந்து ஆள எத்தனையோ குறுக்கு வழிகளைக் கையாண்டு வருகிறது. தங்களால் வெற்றி பெறவே முடியாத மாநிலங்களில் ஜனநாயகத்தை அழிக்கத் துடிக்கிறது.

கடந்த தேர்தல்களில் போலி வாக்காளர்களைச் சேர்த்து, அதன் மூலம் பாஜக தனது வெற்றியைச் சாத்தியப்படுத்தியதை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் ஆதாரங்களோடு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் இந்தத் தேர்தல் மோசடி ஆதாரங்கள், தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாகவே மாறிவிட்டதை காட்டுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கே பேராபத்து!

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து, அடுத்த 5 மாதங்களில் நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்தவர்களை விடக் கூடுதலாக 41 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர். ஐந்தே மாதங்களில் 41 லட்சம் வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்.? வானத்திலிருந்து குதித்தார்களா?.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளை கைபற்றியது. பாஜக கூட்டணிக்கு 17 இடங்கள்தான் கிடைத்தன. இதனை அப்படியே சட்டமன்றத் தேர்தலில் மாற்றி அமைக்க வேண்டுமெனில் எதையாவது செய்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லுக்களை அரங்கேற்றியது பாஜக.

6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தோற்ற பாஜக கூட்டணி, அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் வென்றதற்குக் காரணமே போலியாகச் சேர்க்கப்பட்ட வாக்காளர்கள்தான். கூடுதலாகச் சேர்க்கப்பட்ட 41 லட்சம் வாக்காளர்களால் தேர்தல் முடிவே மாறிப் போனது. நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜகவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தைக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கேட்ட போது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் நடந்து 45 நாட்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறார்கள்.

இதே பாணியில்தான் வரப் போகிற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜக முயல்கிறது. SIR என்ற சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜகவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (ஷிமிஸி) என்கிற பெயரில் இந்தியத் தேர்தல் ஆணையம் இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையில் கை வைத்திருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் பாஜகவின் கண்ணசைவிற்கும் அரசியல் விருப்பத்திற்கும் ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது நாட்டின் ஜனநாயகத்திற்கு விடப்பட்டிருக்கிற மிகப்பெரிய அச்சுறுத்தல். பீகாரில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கிற சூழலில், இவ்வளவு குறுகிய காலத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் ஏன்? என எதிர்க் கட்சிகள் அனைத்தும் கேள்வி கேட்டும் அதனை மதிக்காமல் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது தேர்தல் ஆணையம்.

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் நாட்டு மக்களின் குடியுரிமையைச் சோதித்துப் பார்க்கும் நடவடிக்கையாகவே தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டையையும், தேர்தல் ஆணையமே கொடுத்த வாக்காளர் அடையாள அட்டையையுமே கூட வாக்காளர் தகுதிக்கான அடையாளமாக ஏற்றுக் கொள்ளாமல் மக்களைத் திணறடித்தது தேர்தல் ஆணையம். உச்ச நீதிமன்றம் அவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய பின்பும் அதனைப் புறக்கணித்து அராஜகம் செய்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையினால் பீகாரில் 65 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதில் 36 இலட்சம் பேர் வேலைகளுக்காக வேறு மாநிலங்களுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேலைக்காகத் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்களை எல்லாம் எந்தவிதக் கேள்வியுமின்றி நீக்கி உள்ளனர். அதோடு அவர்கள் வசிக்கும் மாநிலங்களின் வாக்காளர் பட்டியலில் தங்களை இணைந்து கொள்ளலாம் என மற்றொரு அதிர்ச்சிகரமான தகவலையும் தெரிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தின் இந்த SIR நடவடிக்கையினால் பெரியளவில் ஏழை எளிய மக்களும் , சிறுபான்மையின மக்களும், பெண்களும் தங்களது வாக்குரிமையை இழக்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதோடு போலி வாக்காளர்களையும் அதிகளவு சேர்த்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத நபர்கள் பல பேர் ஒரே வீட்டில் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவாகி உள்ளது.

SIR என்பது முறைகேட்டைத் தவிர்ப்பதற்காகச் செய்யப்படுகிறது என்றால் இந்த முறைகேடு எப்படி நடந்தது? முறைகேட்டைக் களைவதாகச் சொல்லிக் கொண்டு முறைகேட்டைத் தேர்தல் ஆணையம் செய்யலாமா? SIR என்ற முறையற்ற வாக்காளர் திருத்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைவிட வேண்டும்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். தமிழ்நாட்டு வாக்காளர்கள் தங்களது வாக்காளர் தகுதியை நிரூபிக்க வேண்டும் எனும் பெயரால் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதே போல முறையற்ற வகையில் லட்சக்கணக்கான பிற மாநில மக்களைத் தமிழ்நாட்டில் சேர்க்கும் சதி திட்டத்தையும் ஒன்றிய பாஜக அரசு மேற்கொள்ளக் கூடும் . இது தமிழ்நாட்டின் அரசியல் உரிமையையே அபகரிக்கும் செயல்.

நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மௌனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாஜகவின் அடிமையாய் மாறி, அதிமுக வை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா? இல்லை என்றால் SIR என்ற முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க,ஸ்டாலின் அவர்களோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள்