தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்!

 

Advertisement

சென்னை: சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. தேர்தல் கூட்டணி தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடிக்கே அதிகாரம். ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்க்க பாஜக முயற்சி செய்து வரும் நிலையில், அதிமுக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

எஸ்.ஐ.ஆர்.யை வரவேற்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக - பாஜக கூட்டணிக்கு அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. கூட்டணிக்கு அதிமுகவே தலைமை என்று கட்சியின் பொதுக்குழுவில் திட்டவட்டம். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை தனித்தனியாக சந்தித்து பேசிய அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து அண்ணாமலை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடிக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிட அதிமுக பொதுக்குழுவில் அங்கீகாரம். தமிழ்நாட்டில் கூட்டணிக்கு அதிமுகவே தலைமை தாங்கும் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எடப்பாடி முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய முடியாது என்று டிடிவி தினகரன் கூறியிருந்தார். டி.டி.வி. தினகரன் நிபந்தனையை நிராகரிக்கும் வகையில் எடப்பாடியே முதல்வர் வேட்பாளர் என்று அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

 

Advertisement

Related News