எடப்பாடி பழனிசாமியின் நாளைய கூட்டங்கள் ரத்து
06:48 PM Aug 06, 2025 IST
சென்னை: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ராஜபாளையத்தில் நாளை (ஆக.7) காலை பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் பழனிசாமிக்கு உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாகக் கூறப்படுகிறது. உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை காலை பங்கேற்க இருந்த உள் அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.