குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக: டிடிவி தினகரன் விமர்சனம்
மதுரை: குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக உள்ளது என டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக மதுரை சோழவந்தான் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்; 2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார். தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குகிறார். தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள் . அதிமுகவின் விதிகளை புறந்தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமிக்கு சுயநலத்தை தாண்டி எதுவும் இல்லை. குரங்கு கையில் பூமாலை போல எடப்பாடி கையில் அதிமுக. துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்னை நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றே சசிகலா கூறி வருகிறார். எடப்பாடிக்கு ஆதரவாக வாக்களித்த 18 எம்.எல்.ஏ.க்களை எப்படி துரோகி என்று அவர் சொல்ல முடியும். சிறையில் இருந்து சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமிதான் துரோகி. செம்மலை போன்றோர் எடப்பாடியை ஏற்க மறுத்து வெளியே சென்றுவிட்டார்கள்.
18 எம்.எல்.ஏ.க்களை நீக்கிய எடப்பாடி துரோகியா? நாங்கள் துரோகியா? பொதுச்செயலாளராக தொடர்வதற்காக கட்சி விதிகளை மாற்றி, ஹிட்லரை போல செயல்படுகிறார் எடப்பாடி. கூவத்தூரில் பதவி கொடுத்த சசிகலாவை இன்று துரோகி என்கிறார் எடப்பாடி பழனிசாமி. கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையை தானே சொரிந்து கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி. தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். தேவர் ஜெயந்திக்கு வந்த செங்கோட்டையனை நீக்கிய எடப்பாடிக்கு தென்தமிழகம் தக்க பாடம் புகட்டும்.
2021 தேர்தலைவிட மோசமான தோல்வியை தென்தமிழகத்தில் 2026 தேர்தலில் எடப்பாடி சந்திப்பார். 2024 தேர்தலில் 3, 4ம் இடங்களுக்கு அதிமுகவை கொண்டு சென்றவர் எடப்பாடி பழனிசாமி என்று கூறினார்.