அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு!!
Advertisement
கோவை: எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்துக்கு வந்திருந்த அதிமுக நிர்வாகியிடம் ரூ.1 லட்சம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை தேக்கம்பட்டி ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கராஜ் பேன்ட் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சம் திருட்டு போனது. பேன்ட் பையை பிளேடால் கிழித்து கைவரிசை காட்டிய மர்மநபருக்கு மேட்டுப்பாளையம் போலீசார் வலைவீசி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் | இன்று காலையில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
Advertisement