எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது: நயினார் நாகேந்திரன்!
சேலம்: சேலத்தில் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பை நிகழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு மரியாதை நிமித்தமானது. பிரதமர் மோடியின் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் தொடர்பாக பேசினேன்.
Advertisement
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து ஆலோசிக்கவில்லை. மேலும் என்.டி.ஏ கூட்டணிக்கு வருவார்களா என்பது பற்றி ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரிடம் தான் கேட்க வேண்டும். மேலும் மற்ற கட்சிகளின் உள்கட்சி விவகாரங்களில் தலையிடுவது இல்லை என்றார். விஜய் பற்றிய கேள்விக்கு, கூட்டம் வருவதற்காக திமுக, தவெக இடையில் தான் போட்டி என்று கூறுவதை ஏற்க முடியாது என பதிலளித்தார்.
Advertisement