உதகை பிரச்சாரத்திற்காக கோபி வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: 8 கி.மீ. தொலைவிற்கு வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், பேனர்கள்
ஈரோடு: அதிமுகவில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் ஒன்றினைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார். அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு மேற்கு புறநகர் பதவிகளில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டளும் கூட தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் பேர்கொடி உயர்த்திவருகிறார்.
இந்த நிலையில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு முதன் முறையாக கோபிசெட்டிபாளையம் வழியாக செல்லக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்ப்பு அளிக்க அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்ட பிறகும் கூட இங்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை வெளிகாட்டவே அதிமுகவினர் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிபாக சேலத்தில் இருந்து பவானி, கவுந்தப்பாடி வழியாக கோபிசெட்டிபாளையம் வந்துள்ள அவர் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக எந்த வரவேற்பும் அளிக்கப்படவில்லை.
ஆனால் செங்கோட்டையன் பதவிவகித்த மேற்கு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்களம் ஆகிய 2 இடங்களில் மட்டுமே இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக மாவட்ட எல்லைகளை கடந்து எடப்பாடி பழனிசாமி செல்லும்போது இது போன்ற வரவேற்பு இருந்ததில்லை. முதன்முறையாக அவர் உதகைக்கு செல்லக்கூடிய இந்த வழியில் செங்கோட்டையன் பதவி நீக்கத்திற்கு பிறகு செல்லக்கூடிய நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் முன்பு திரண்டு பெரும் திரளை காட்டி அதிமுகவினர் வரவேற்பு அளித்துவருகின்றனர்.
ஈடோரு புறநகர் மேற்கு மாவட்டம் தொடங்க கூடிய எல்லையில் இருந்தே 8 கி.மீ தொலைவிற்கு எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக அதிமுக கொடிகளும் பேனர்களும் அமைக்கப்பட்டுள்ளது.