எடப்பாடி பழனிசாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
Advertisement
சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு முதிர்ச்சியான அரசியல் தேவை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார். முரண்பட்ட கூட்டணியில் இருந்து கொண்டு பழனிசாமி அழைப்பதை முற்றாக நிராகரிக்கிறோம். எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு சிவப்பு கம்பள வரவேற்பு அல்ல, ரத்த கம்பள வரவேற்பு. தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் பாஜக அரசு சதி செய்கிறது; தொகுதி சீரமைப்பு சதியை எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறாரா? என்றும் முத்தரசன் கேள்வி எழுப்பினார்.
Advertisement