கோவை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சார பயணத்துக்கு பாஜகவினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேட்டுப்பாளையத்தில் பழனிசாமியை சந்தித்து நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரப் பயணத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.