எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது: மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி
மதுரை : எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என்று டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், "மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது தனது நீண்டகால கோரிக்கை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதை சுட்டிக்காட்டினேனே தவிர, தேவர் பெயரை விமான நிலையத்திற்கு சூட்ட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எடப்பாடி பழனிசாமியின் வன்னியர் உள் ஒதுக்கீடு அரசியலால் தென் தமிழகத்தில் சமூக அமைதி கெட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
கூட்டணி குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கும் நிலையில் தான் அ.ம.மு.க. உள்ளது. செங்கோட்டையன் முயற்சிக்கு நான் ஆதரவாக இருப்பேன். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அ.தி.மு.க.வின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது. எடப்பாடி பழனிசாமி போன்ற சுயநலவாதிகள் இருக்கும் வரை எதுவும் நடக்காது. "இவ்வாறு தெரிவித்தார்.