சட்டவிரோத இருமல் மருந்து வழக்கு: 3 மாநிலங்களில் ஈடி சோதனை
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத இருமல் மருந்து விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பான 30 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை பணமோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. குற்றத்தின் மொத்த வருமானம் ரூ.1000கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
Advertisement
Advertisement