ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பெஹ்ரோர் முன்னாள் சுயேட்சை எம்எல்ஏ பல்ஜீத் சிங். இவர் எம்எல்ஏவாக இருந்தபோது பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக நேற்று முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராஜஸ்தான், அரியானாவிலும் சோதனை நடத்தப்பட்டது.