ஜெகத்ரட்சகனுக்கு எதிரான ED நோட்டீசுக்கு தடை
டெல்லி; ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை ரூ.32.69 கோடிக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி வாங்கியதாக புகார் எழுந்தது. வாங்கிய பங்குகளை ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி தனது மனைவி பெயருக்கு மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிங்கப்பூரின் சில்வர் பார்க் நிறுவன பங்குகளை வாங்கியதில் அன்னிய செலாவணி சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதாக ED புகார் தெரிவித்தது. அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தை மீறியது தொடர்பாக பதில் அளிக்கக் கோரி ஜெகத்ரட்சகன், அவரது குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அமலாக்கத்துறை நோட்டீசை எதிர்த்து ஜெகத்ரட்சகன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்ததை அடுத்து ஜெகத்ரட்சகன் உச்சநீதிமன்றத்தை நாடினார்.