EDக்கும் அஞ்ச மாட்டோம்; மோடிக்கும் அஞ்ச மாட்டோம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்
சென்னை: EDக்கும் அஞ்ச மாட்டோம்; மோடிக்கும் அஞ்ச மாட்டோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக உள்ளது. வாக்கு திருட்டு என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. அமைச்சர் பெரியசாமி தொடர்பு இடங்களில் நடைபெறும் ED சோதனைக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.