பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு..!!
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. உலகிலேயே அதிகம் கவனம் பெறக்கூடிய பரிசுகளில் ஒன்றாக இந்த நோபல் பரிசு கருதப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பற்றிய அறிவிப்புகள் கடந்த 06ஆம் தேதி (06.10.2025) முதல் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், இத்தகைய நோபல் பரிசு பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழுடன் இந்திய மதிப்பீட்டில் சுமார் 10.41 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட 338 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. இத்தகைய சூழலில் தான் நார்வே நாட்டின் ஆஸ்லோ நகரில் 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழுவால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்ததது. மேரி இ.பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், சிமோன் சகாகுஷி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவித்தது. ஜான் கிளார்க், மைக்கேல் ஹெச்.டெவோரெட், ஜான் எம்.மார்ட்டினிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன், ஓமர் எம்.யாஹி ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2025ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய்-க்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி அமைதிக்கான நோபல் பரிசை மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர், இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.