தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கிழக்கு லடாக் நிலவரம் குறித்து இந்தியா-சீனா இடையே பேச்சுவார்த்தை

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்திய எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி இந்திய, சீன ராணுவத்தினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீன வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். அப்போது முதல் இந்தியா - சீனா எல்லை பிரச்னை நீடித்து வந்தது. இதன் தொடர்ச்சியாக கிழக்கு லடாக்கில் உள்ள டெப்சாங், டெம்சோக் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியாவும், சீனாவும் தங்கள் நாட்டு வீரர்களை நிறுத்தி வந்தனர்.

Advertisement

இதனால் இருநாடுகளிடையேயான உறவில் சிக்கல் ஏற்பட்டதால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.  இதுதொடர்பாக கடந்த 2024ம் ஆண்டு இந்தியா சீனா இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதையடுத்து இருநாடுகளும் கிழக்கு லடாக் பகுதியில் இருந்து தங்கள் நாட்டு வீரர்களை திரும்ப பெற்றனர். இந்த நடவடிக்கை தொடங்கி கடந்த 25ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெற்றது.

இந்நிலையில், கிழக்கு லடாக்கில் தற்போதுள்ள நிலவரம் குறித்து இந்தியா- சீனா இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பில், “கிழக்கு லடாக்கில் உள்ள உண்மையான எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவது குறித்து இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 25ம் தேதி மார்தோ ஷூசுவேல் எல்லைப்பகுதியில் நடந்த 23வது ஜெனரல் நிலை பேச்சுவார்த்தையில், சீனா இந்தியா எல்லையின் மேற்கு பகுதியை நிர்வகிப்பது குறித்து இருதரப்பினரும் ஆழமான மற்றும் ஆக்கப்பூர்வமான கருத்துகளை பரிமாறி கொண்டன. மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் வழிகாட்டுதல்களின்படி இருதரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடர முடிவு செய்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆனால் இந்த சந்திப்புகள் குறித்து இந்திய அதிகாரிகள் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வௌியிடவில்லை.

Advertisement

Related News