தசரா கூட்டம், துர்கா சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மும்பையில் 19,000 போலீசார் குவிப்பு: பலத்தை காட்ட ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரே கட்சிகள் மும்முரம்
மும்பை: ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசனோ கட்சிகளின் தசரா கூட்டம் மற்றும் துர்கா சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நகர் முழுவதும் 19,000 போலீசார் மற்றும் அதிகாரிகள், அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால் சிவசேனா கட்சிகள் தங்கள் பலத்தை நிரூபிக்கும் முனைப்புடன் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
கடந்த 1966ம் ஆண்டு பால்தாக்கரே சிவசேனாவை துவக்கினார். அதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் தாதர் சிவாஜி பார்க்கில் நடக்கும் தசரா கூட்டத்தில் உரை நிகழ்த்துவார். பால்தாக்கரே மறைந்த பிறகு, சிவசேனா கட்சிக்கு அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைவரானார். அவரும், தந்தையைப் பின்பற்றி சிவாஜி பார்க்கில் தசரா கூட்டத்தில் உரையாற்றினார்.மகாராஷ்டிரா அரசியலில் சிவசேனாவின் பங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. 2019ம் ஆண்டு பாஜ வெற்றி பெறுவதற்கு சிவசேனாவுடனான கூட்டணி பெருமளவில் உதவியது. வெற்றிக்குப் பிறகு, யார் முதல்வராவது என்பதில் சிவசேனா மற்றும் பாஜ இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தர முன்வராததால், அந்தக் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேறினார். பின்னர், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து, மகா விகாஸ் அகாடி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்து முதல்வரானார். இரண்டரை ஆண்டு கடந்த நிலையில், உத்தவ் அமைச்சரவையில் இருந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களுடன் விலகியதால், ஆட்சி கவிழ்ந்தது. சிவசேனா கட்சியும் சின்னமும் ஷிண்டேவுக்கே உரியது என தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
இதனால், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா என்ற பெயரில் உத்தவ் தாக்கரே கட்சியை துவக்கினார். அப்போதிருந்து இரு கட்சிகளும் தனித்தனியாக தசரா கூட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வந்ததால், இரு அணியினரும் தங்கள் பலத்தை காட்டும் வகையில் கூட்டம் நடத்தினர். உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கிலும், ஷிண்டே ஆசாத் மைதானத்திலும் கூட்டம் நடத்தினர்.
அதில் இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்துத்துவாவை மையப்படுத்தி பேசிய ஏக்நாத் ஷிண்டே, காங்கிரசுடன் சேர்ந்ததால் சிவசேனாவின் கொள்கைகளை உத்தவ் கைவிட்டு விட்டார். மேலும், உத்தவ் செயல்படாத முதல்வர் எனவும் விமர்சித்தார். உத்தவ் தாக்கரே, ஷிண்டேயை துரோகி என குறிப்பிட்டு தாக்கினார். பேரவை தேர்தல் நெருங்கிய நிலையில் இருவரும் பரஸ்பரம் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
இதுபோன்றே இந்த ஆண்டு தசரா பேரணி, உள்ளாட்சி தேர்தலை ஒட்டி நடைபெறுகிறது. உத்தவ் தாக்கரே சிவாஜி பார்க்கில் கூட்டம் நடத்துகிறார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி ஆசாத் மைதானத்தில் கூட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் கன மழை காரணமாக தாதர் சிவாஜி பார்க்கும், ஆசாத் மைதானமும் தண்ணீர் குட்டை போல காட்சி அளிக்கின்றன. இதனால் தசரா பேரணி கோரேகாவில் உள்ள நெஸ்கோ பொருட்காட்சி மையத்தில் நடத்தப்படும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். மேலும் கட்சி தொண்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், உத்தவ் அணி சிவாஜி பார்க்கில் கூட்டம் நடத்துவது என்ற முடிவை மாற்றவில்லை.
இந்த ஆண்டு தசரா கூட்டம் மட்டுமின்றி, துர்கா சிலை ஊர்வலங்களும் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு மும்பையில் 19,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாளை துர்கா சிலை ஊர்வலமும், அரசியல் கட்சிகளின் தசரா பேரணிகளும் ஆகும். இதில் பயனாளிகள் ரூ.10 செலுத்துகின்றனர்.
மீதமுள்ள 40 ரூபாயை மாநில அரசு செலுத்துகிறது. சிவபோஜன் திட்டத்தை செயல்படுத்தும் நிர்வாகிகளுக்கு நேரடியாக இதற்கான பணம் வழங்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு அரசு மீண்டும் சிவபோஜன் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருக்கிறது. இத்தனை மாதங்களாக திட்டத்தை கண்டு கொள்ளாத அரசாங்கம், தேர்தலில் மக்களின் வாக்குகளை கவருவதற்காகவே மீண்டும் திட்டத்தை தொடங்குவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.