தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தசரா விழாவை தொடங்கிவைக்க இஸ்லாமிய எழுத்தாளர் அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி!

பெங்களூரு: ஒரு மதத்தை சேர்ந்தவர் மற்றொரு மதத்தின் விழாக்களில் பங்கேற்பது தவறல்ல என கர்நாடக ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான, பிரபலமான விழாக்களில் தசராவும் ஒன்று. இது, அக்டோபர் 2ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் மைசூருவில், தசரா கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்க புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரும் சமூக நல ஆர்வலருமான பானு முஷ்டாக் அழைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இந்நிலையில், மைசூரு தசரா விழாவைத் தொடங்கி வைக்க, எழுத்தாளர் பானு முஷ்டாக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்த மனு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2022ல் புக்கர் பரிசு வென்ற எழுத்தாளர் பானு முஷ்டாக், வழக்கறிஞர் மட்டுமல்ல சமூக செயற்பாட்டாளரும் ஆவார். தசரா விழா ஒரு பாரம்பரியமான இந்து விழா என்றும், அதனை இஸ்லாமியரான பானு முஷ்டாக், இந்து விழாவில் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைப்பது ஏற்புடையதல்ல என்றும் கூறி, பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி விபு பக்ரு மற்றும் நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கன்னட மொழிக்கு எதிராக அழைக்கப்பட்டவர் சில கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், இந்து அல்லாதவராக இருப்பதால், மத விழாக்களையும் உள்ளடக்கிய தசரா விழாவைத் தொடங்கி வைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் வாதிட்டனர். இதையடுத்து அரசி​யலமைப்பு சட்​டம் வழங்​கி​யுள்ள உரிமை​யின்​படி, அரசின் நிகழ்ச்சி நிரலை பிறர் தீர்​மானிக்க முடி​யாது. ஒவ்​வொரு இந்​திய குடிமக​னுக்​கும் அரசின் நிகழ்​வில் பங்​கேற்​கும் உரிமை உள்​ளது. தசரா விழாவில் பானு முஷ்டாக் பங்கேற்பது அரசியல் சாசனத்தை மீறும் செயல் அல்ல. பல பொறுப்புகளில் இருந்தவர் பானு முஷ்டாக், தசரா விழாவில் பங்கேற்க தகுதியானவர்தான். பானு முஷ்டாக் நிகழ்ச்​சியை தொடங்கி வைத்​தால் இந்​துக்​களின் மனம் புண்​படும் என்​பதை ஏற்க முடி​யாது. எனவே மனுதாரர்களின் வாதங்களை நிராகரித்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Related News