தசரா, தீபாவளியை முன்னிட்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்
Advertisement
சென்னை: தசரா, தீபாவளியை முன்னிட்டு மைசூருவில் இருந்து நெல்லை, காரைக்குடி மற்றும் ராமநாதபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. தசரா, தீபாவளி கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம். நாளை முதல் நவம்பர் 24ம் தேதி வரை மைசூருவில் இருந்து நெல்லைக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம். செப்.18ல் இருந்து நவ.29ம் தேதி வரை மைசூருவில் இருந்து காரைக்குடிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம். நாளை முதல் அக்டோபர் 27ம் தேதி வரை மைசூருவில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும்.
Advertisement