உலர் சாம்பல் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என வழக்கு..!!
மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் இருந்து உலர் சாம்பல் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என வழக்கு தொடரப்பட்டது. விதிகளின்படி உலர் சாம்பல் சிறு, குறு நிறுவனங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டது. உரிய ஆவணங்களுடன் நாளை ஆஜராக டான்ஜெட்கோ இயக்குநருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகவில்லை எனில் விசாரணையை சிபிஐக்கு மாற்ற நேரிடும் என ஐகோர்ட் எச்சரித்தது. இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை ஆகஸ்ட்.26க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது உத்தரவிட்டது.
Advertisement
Advertisement